ஹைலைட்ஸ்
- ஆகஸ்ட் 10 முதல் தமிழகத்தில் ஜிம்களை திறக்க அனுமதி
- 50 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடையவர்களுடன் ஜிம் செயல்பட அனுமதி
- நிலையான வழிக்காட்டு செயல்முறைகள் தனியாக வழங்கப்படும்
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 19 லட்சத்தினை கடந்துள்ள நிலையில், இன்று முதல் உடற்பயிற்சி கூடங்கள் மற்றும், யோகா மையங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 10 முதல் தமிழகத்தில் உள்ள தனியார் உடற்பயிற்ச்சிக் கூடங்களை திறக்க அனுமதியளிக்கப்படுவதாக முதலவர் ஆணை பிறப்பித்துள்ளார்.
இதில், 50 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடையவர்களுடன் 10.08.2020 முதல் தமிழகத்தில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதியளிக்கப்படுகின்றது. மேலும், இதற்கான நிலையான வழிக்காட்டு செயல்முறைகள் தனியாக வழங்கப்படும். அவற்றை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. என முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.