Read in English
This Article is From Jan 17, 2019

''குறைவான சம்பளம்... அதிக துன்புறுத்தல்'' ஹ1பி விசா பணியாளர்கள் பற்றிய அதிர்ச்சி ஆய்வு!

ஹச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாகவும், அவர்களுக்கு பணியிடத்தில் அதிக துன்புறுத்தல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Advertisement
உலகம்

அமெரிக்கா, அமெரிக்கர்களுக்கே என்ற கொள்கையை முன்வைத்தார் ட்ரம்ப்.

Highlights

  • "ஹச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு பாதிகாப்பு அளித்திட வேண்டும்"
  • "ஹச்1பி விசா வைத்திருப்பவர்கள் பணியிடத்தில் துன்புறுத்தப்படுகிறார்கள்"
  • "ஹச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு ஊதியம் அதிகபடுத்த வேண்டும்"
Washington:

ஹ1-பி விசா மூலம் அமெரிக்க வந்தவர்கள் தொடர்ந்து மோசமான பணியிடத்திலும், துன்புறுத்தலுக்கு உள்ளாகும் நிலைமையிலுமே வேலைக்கு செல்கிறார்கள் என்று அமெரிக்க ஆலோசனை அமைப்பு கூறியுள்ளது. 

தெற்காசிய அட்லாண்டிக் அமைப்பு கூறியுள்ள தகவலின்படி '' வேலை செய்வதற்கு ஏற்ற சூழலையும், பணியாளர் உரிமைகளையும் இந்த விசா பெறும் போது உறுதிப்படுத்த வேண்டும்'' என்று வலியுறித்தியுள்ளது. 

ஹர்1-பி விசாவுக்கான சீர்திருத்தங்கள் விரைவில் வெளியாகும் என்று அதிபர் ட்ரம்ப் முன்பே குறிப்பிட்டிருந்தார். "அமெரிக்காவில் ஹெச்1-பி விசா வைத்திருப்பவர்கள் அதனை பயன்படுத்தி குடியுரிமை பெற விரும்புகிறார்கள். அது மட்டுமின்றி குடியுரிமைக்காக விசா நீட்டிப்பு வழங்குவதையும் ஏற்க முடியாது" என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.

இதன் மூலம் அதிக திறனுள்ள வேலை வெளிநாட்டவருக்கு சென்று விடுகிறது. அமெரிக்கர்களுக்கு கிடைப்பதில்லை. அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற கொள்கையை முன்வைத்தார் ட்ரம்ப்.

Advertisement

ஆனால், இந்த அறிக்கையில் தற்போதைய அமைப்பு, அமெரிக்கர்களை மட்டுமல்ல ஹ1பி விசா வைத்திருப்பவர்களையும் பாதிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

ஹச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாகவும், அவர்களுக்கு பணியிடத்தில் அதிக துன்புறுத்தல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையில் அவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற விஷயமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்தப் பாதுகாப்பு என்பது இவர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பணியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டியது அவசியம் என்றும், பொருளாதார சிக்கலுக்கு இந்த விஷயங்களை கவனித்து ஆகவேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளது.

"இவற்றையெல்லாம் செயல்படுத்த சரியான செயல்பாட்டு முறைகள் தேவை. அப்போதுதான் இதனை சரிசெய்ய முடியும். அப்படி செய்யும் போது இதில் உள்ள முறைகேடுகள் குறையும்" என்று ஆலோசனை வழங்கியுள்ளது.

Advertisement