"ஆனால் இஸ்லாமைப் போன்ற மற்றொரு அடிப்படை வாத மதமான மார்க்சிய மதத்திற்கு இது புரியாது."
ஹைலைட்ஸ்
- பிரதமர் மோடி இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்
- கொரோனா குறித்துதான் இன்றைய உரையில் பேசினார் மோடி
- முன்னதாக இரண்டு முறை இதைப் போன்று உரையாற்றியுள்ளார் மோடி
“ஏப்.5ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்களுக்கு மின் விளக்குகளை அனைத்து மெழுகுவர்த்தி ஏற்றுங்கள்” என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த திடீர் அறிவிப்பால் கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்ள முடியாது என்று கூறி, பிரதமர் மோடியை விமர்சித்து வருகின்றன எதிர்க்கட்சிகள்.
அப்படித்தான் பிரதமரின் அறிவிப்பை, சிபிஎம் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர், டி.கே.ரங்கராஜன், “நோய்நொடிகள் வெம்புலி போல்
நூறுவிதம் சீறு வதால்
தாய்தந்தையர் பெண்டு பிள்ளை –என் தோழனே
சாய்ந்து விழக் கண்டோமடா
என்று பாடினார் ஜீவா ...
இன்றும் மக்களின் நிலைமை இப்படியே இருக்க, கையைத் தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் என விதவிதமாய் அறிவிப்புகள். நமக்கு வாய்த்திருக்கும் பிரதமர்,” என்று தன் விமர்சனத்தை முன்வைத்தார்.
அதற்கு எச்.ராஜா, “அதேபோல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட உறுதியோடு ஒரு செயலைச் செய்யும் போது ஒற்றுமை, உற்சாகம் ஏற்படும். விளக்கேற்றுவதன் குறிக்கோள் அதுவே. ஆனால் இஸ்லாமைப் போன்ற மற்றொரு அடிப்படை வாத மதமான மார்க்சிய மதத்திற்கு இது புரியாது. என்ன செய்ய தங்களுக்கு வாய்த்த கொள்கை அப்படி. வணக்கம்,” என்று கருத்திட்டுள்ளார்.