This Article is From Aug 29, 2020

மறைந்த வசந்த்குமார் கொரோனா குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய காட்சிகள்!!

அதனால், தனிநபர்கள் மற்றும் சிறு தொழிலாளர்கள் தங்களது கடன்களை திரும்ப செலுத்த மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அவர் மத்திய அரசை வலியுறுத்துகிறார். 

மறைந்த வசந்த்குமார் கொரோனா குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய காட்சிகள்!!

மறைந்த வசந்த்குமார் கொரோனா குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய காட்சிகள்!! (File)

New Delhi:

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த கன்னியாகுமரியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார், வைரஸின் தீவிரம் குறித்து இந்த வருட தொடக்கத்திலே நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளார். அப்போது அவரது பேசும் போது கொடுக்கப்பட்ட நேரம் முடிவடைந்ததால் அவரது மைக் அணைக்கப்படுகிறது. 

மார்ச் மாதத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்த போது வசந்தகுமார் எம்.பி பேசியதாவது, கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பாதிப்படைந்து வரும் நிலையில், அதனை நாம் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என சபாநாயகரிடம் அவர் வலியுறுத்துகிறார்.

தொடர்ந்து, வருமானம் இல்லாததன் காரணமாக மக்கள் தங்களது கடன்களை திரும்ப செலுத்தவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால், தனிநபர்கள் மற்றும் சிறு தொழிலாளர்கள் தங்களது கடன்களை திரும்ப செலுத்த மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அவர் மத்திய அரசை வலியுறுத்துகிறார். 

தினக்கூலிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்களுக்கு அரசு குறைந்தது ஒரு குடும்பத்திற்கு ரூ.2000 வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். ஆனால், அவருக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்ததால் அவையில் அவரை பேச விடாமல் அடுத்தவரை பேச கூறுகிறார் சபாநாயகர். 

தொடர்ந்து, ஒரு நிமிட கால அவகாசம் கேட்டு பேசும் வசந்தகுமார், ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார். ஜிஎஸ்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறார். எனினும், அவர் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை. அவரது மைக்கை அணைக்கும் படி கூறி வேறு ஒருவருக்கு வாய்ப்பு தருகிறார். 

தற்போது, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அவர் உயிரிழந்த நிலையில், நாடாளுமன்றத்தில் அவர் பேசிய இந்த காணொளி காட்சிகள் தற்போது வைரலாக சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. 

எனினும், பிந்தைய நாளில் பிரதமர் மோடி சார்பில் அறிவிகப்பட்ட 20லட்சம் கோடி பொருளாதார திட்டத்தில் வசந்தகுமார் பரிந்துரைத்த பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

கடந்த ஆக.10ம் தேதி கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வசந்தகுமார் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, சிகிச்சை பெற்று வந்த அவரின் உடல்நிலை, நேற்றைய தினம் மிகவும் கவலைக்கிடம் அடைந்த நிலையில், நேற்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

.