இந்த ஆண்டு முதல், H-1B விசாக்களுக்கான மின்னணு பதிவு முறை அமல் செய்யப்பட்டது.
Washington: அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேறுதல் சேவைகள் அமைப்பான யு.எஸ்.சி.ஐ.எஸ் (USCIS), 2021 ஆம் ஆண்டிற்கான 65,000 H-1B விசாக்கள் அனைத்தையும் வழங்கும் அளவுக்குப் போதுமான விண்ணபங்கள் வந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளது.
யு.எஸ்.சி.ஐ.எஸ், “2021 ஆம் ஆண்டுக்கான H-1B விசாக்களுக்கான மின்னணு விண்ணபங்கள் போதுமான அளவுக்கு வந்துவிட்டது,” என அதிகாரப்பூவமாக தெரிவித்துள்ளது.
2021 ஆம் நிதி ஆண்டானது, 2020 ஆம் ஆண்டு, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மார்ச் 31 ஆம் தேதிக்கு முன்னர், யாருக்கெல்லாம் H-1B விசா கொடுக்கப்படும் என்பது குறித்து அமெரிக்க அரசு தரப்பு தெரிவிக்கும்.
H-1B விசாக்களுக்கு விண்ணப்பிக்க ஜூன் 30 ஆம் தேதிதான் கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு முதல், H-1B விசாக்களுக்கான மின்னணு பதிவு முறை அமல் செய்யப்பட்டது. விண்ணப்பங்களை ஏப்ரல் 1 முதல் ஃபைல் செய்ய ஆரம்பிக்கும் முன்னரே, அனைத்து நிறுவனங்களும் யு.எஸ்.சி.ஐ.எஸ் உடன் ரெஜிஸ்டர் செய்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அதற்கு மாச்ர் 20 ஆம் தேதிதான் கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
யு.எஸ்.சி.ஐ.எஸ், அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்களில் முதுகலை அல்லது அதற்கு மேற்பட்ட பட்டங்களைப் படிப்பவர்களுக்குக் கூடுதலாக 20,000 H-1B விசாக்களை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.