This Article is From Jul 17, 2019

மும்பை குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையது கைது! - பாக்.ஊடகம் தகவல்!

Hafiz Saeed Arrested: லாகூரில் கைது செய்யப்பட்ட ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சையது கைது

New Delhi:

JuD Chief Hafiz Saeed Arrest: மும்பை குண்டு வெடிப்பில் மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சையது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

லாகூரில் கைது செய்யப்பட்ட ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஹபீஸ் சையது கைதான தகவலை பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் தலைவரான ஹபீஸ் சையது மீது பாகிஸ்தானில் 23 பயங்கரவாத வழக்குகள் உள்ளன. மேலும், 2008 மும்பை பயங்கரவாத தாக்குதல்களின் முக்கிய மூளையாக செயல்பட்டவர் ஆவார். 

இந்தியாவின் தொடர் வலியுறுத்தலால் தீவிரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு உலகநாடுகளின் நெருக்குதல் அதிகமானது. இதையடுத்து சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருந்த ஹபீஸ் சயீத் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

அதில், தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டியது, பண மோசடி போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

.