டைசன் சூப்பர் சானிக் (Dyson Supersonic) நிறுவனம் தங்க ஹேர் ட்ரையரை தயாரித்துள்ளது.
New Delhi: ஆடம்பர பிரியர்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியது. டைசன் சூப்பர் சானிக் (Dyson Supersonic) நிறுவனத்தின் புதிய தயாரிப்பாக 23.75 காரட் தங்க முலாம் பூசப்பட்ட ஹேர் டிரையர் சந்தைக்கு வந்துள்ளது.
இதுகுறித்து, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகின் மதிப்பு மிக்க பொருட்களில் தங்கமும் ஒன்று. சிற்பங்களிலும், கலைப் பொருட்களிலும் தங்கம் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களாக பொறியியல் திறனை மேற்கொண்டு புதிய ஹேர் ட்ரையரை வடிவமைத்துள்ளோம்.
இந்த புதிய முயற்சி எங்களுக்கு சிரமத்தை அளிக்கவில்லை. தங்கத்தை பயன்படுத்தி பொருட்களை வடிவமைப்பது எங்களுக்கு புதிதான ஒன்று. ஆனால் பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் இந்த புதிய தொழில்நுட்பத்தை நாங்கள் கற்றுக் கொண்டுள்ளோம். எங்களது சிறந்த வடிவமைப்பு, பெயின்ட், மாடல் உருவாக்கம் உள்ளிட்ட திறன்களை பயன்படுத்தி 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்ற வகையில் ஹேர் டிரையர் உருவாக்கியுள்ளோம்.” என்று கூறப்பட்டுள்ளது.