Hajj 2020: ஹஜ்2020 விண்ணப்பத்திற்கு விண்ணப்பிக்க இந்த நேரடி இணைப்பை பயன்படுத்தலாம். hajcommittee.gov.in
New Delhi: முஸ்லீம் மதத்தின் புனித பயணமான ஹஜ்ஜிற்கு செல்வதற்கான விண்ணப்ப செயல்முறை இன்று தொடங்கியது. இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவிற்கு செல்லும் யாத்திரை இது. இஸ்லாமிய நம்பிக்கையின் ஐந்து தூண்களில் ஒன்றான ஹஜ், அல்லாவை பின்பற்றுபவர்கள் இந்த பயணம் தனது பாவங்களை நீக்கி தூய்மைபடுத்தப்படுவதாக நம்புகிறார்கள். பயணத்தை மேற்கொள்ள உடல் மற்றும் போதுமான அளவு நிதியும் இருக்கவேண்டியது அவசியம்.
“ஹஜ் 2020க்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் அக்டோபர் 10 முதல் நவம்பர் 10 வரை ஏற்றுக்கொள்ளப்பட்டும்” என்று ஹஜ் கமிட்டி ஆப் இந்தியா கூறியது. ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை தாக்கல் செய்வதற்கான நடைமுறை குறித்து விரிவாக அறிவிப்பு செய்துள்ளது.
ஹஜ் 2020: ஹஜ் விண்ணப்பத்தை ஆன்லைனிலும் மொபைல் பயன்பாட்டிலும் தாக்கல் செய்யும் செயல்முறையை அறிந்து கொள்ளுங்கள்
ஆன்லைனில் ஹஜ்2020 விண்ணப்பத்திற்கு விண்ணப்பிக்க இந்த நேரடி இணைப்பை பயன்படுத்தலாம். hajcommittee.gov.in
இணையதள பக்கத்தில் “ஆன்லைன் அப்ளிகேஷன்” என்பதை க்ளிக் செய்க.
பின் “நியூயூசர் அப்ளிகேஷன்” என்பதை கிளிக் செய்தால் பூர்த்தி செய்ய வேண்டிய படிவம் தோன்றும்.
உங்களின் பெயர், மாநிலம், மாவட்ட்ம, மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி, உள்ளே நுழைவதற்கான கடவுச் சொல் மற்றும் பாதுகாப்பு குறியீடு போன்ற விவரங்களை சமர்பிக்கவும்.
“நான் வழங்கிய தகவல் சரியானது என்பதை உறுதி செய்கிறேன்” என்ற செக் பாக்ஸை க்ளிக் செய்து ‘சம்மிட்' செய்யவும். பதிவு செய்யப்பட்ட போன் நம்பருக்கு ஓடிபி வரும்.
ஒடிபி அளித்து விவரங்களை சரிபார்க்கவும்.
இப்போது உங்களின் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.
போதுமான விவரங்களை அளித்துவிட்டு புகைபடம் மற்றும் பாஸ்போர்ட்டின் ஸ்கேன் பிரதிகளையும், முகவரிக்கான சான்றுகளையும் வழங்க வேண்டும்.
பணம் செலுத்தும் முறைகளை பூர்த்தி செய்து பணத்தை செலுத்தி படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.
இதே செயல்முறையை ஹஜ்ஜின் மொபைல் ஆப் மூலம் பூர்த்தி செய்யலாம். இந்த ஆப் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது.