Udaipur: ரஃபேல் ஒப்பந்தம் தொடர்ந்து விவாதப் பொருளாகி மாறி வரும் நிலையில், ‘இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் நிறுவனத்தால் நிச்சயமாக ரஃபேல் விமானங்களை தயாரித்திருக்க முடியும்' என்று அதன் தலைவர் கே.மாதவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு, 36 ரஃபேல் விமானம் வாங்க ஒப்பந்தம் போட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் என்று சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது. 59,000 கோடி ரூபாய் மதிப்பில் பிரான்ஸ் நாட்டு டசால்டு ஏவியேஷன் நிறுவனத்துடன் போடப்பட்ட இந்த ஒப்பந்தம் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த ஒப்பந்தத்தில் மிகவும் சர்ச்சைக்குள்ளான, விமான விலை குறித்து நீதிமன்றம், மிகவும் அவசியம் என்றால் மட்டுமே பேசப்படும் என்று முன்னரே தெரிவித்திருந்தது. ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை செய்ய நீதிமன்றம் கண்காணிப்பிலான குழு அமைக்கப்பட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் தரப்பு வழக்கு தொடர்ந்தது. அந்தக் கட்சி, பிரதமர் மோடியையும், மத்திய அரசின் மீதும் இந்த ஒப்பந்தத்துடன் தொடர்புபடுத்தி, ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தி இருந்தது. இப்படி தொடர்ந்து சர்ச்சைக்குரிய பேசு பொருளாக இருந்து வருகிறது ரஃபேல் ஒப்பந்தம்.
இந்நிலையில் இந்துஸ்தான் நிறுவனத் தலைவர் மாதவன், ‘இந்திய அரசுக்கு சொகுசு விமானம் வேண்டும் என்ற போது, இந்துஸ்தான் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தைக் கொடுக்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால், தற்போதைய மத்திய அரசு ஆட்சிக்கு வந்தவுடன், விமானங்கள் உடனடியாக வேண்டும், ஆகவே, டசால்டு நிறுவனத்திடமிருந்து அவை பெறப்படும் என்று சொல்லிவிட்டது' என்று தகவல் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பு வந்த பின்னரும் காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர் ராகுல் காந்தியும், ‘பிரதமர் மோடியால் ஓடவும், ஒளிந்து கொள்ளவும் முடியும். ஆனால் தப்பிக்க முடியாது. ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை நடத்தப்படும்போது உண்மை வெளிவரும். அனில் அம்பானிக்கு மோடி உதவினார் என்பதை ஆதாரத்துடன் நிரூபிப்போம்' என்று சொல்லி வருகிறார்கள்.