বাংলায় পড়ুন Read in English
This Article is From Feb 10, 2020

இந்தியாவில் குடியுரிமை அளித்தால், ”பாதி வங்கதேசமே காலியாகிவிடும்”: மத்திய அமைச்சர்

காங்கிரஸ் போன்ற கட்சிகள் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியர்களுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்துகின்றன என உள்துறை அமைச்சர் கிஷான் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Advertisement
இந்தியா Edited by
Hyderabad:

வங்கதேசத்தவருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதாக வாக்குறுதி அளித்தால் பாதி வங்கதேசமே காலியாகிவிடும் என மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார். 

ஹைதராபாத்தில் ரவிதாசர் ஜெயந்தியையொட்டி நடந்த விழா ஒன்றில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி பேசியதாவது, 'மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டில் வாழும் 130 கோடி இந்தியர்களுக்கும் எதிரானது என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ரெட்டியால் நிரூபிக்க முடியுமா?'என கேள்வி எழுப்பினார். 

தொடர்ந்து, பேசிய அவர், வங்கதேசத்தவருக்கு இந்திய குடியுரிமை அளிப்பதாக வாக்குறுதி அளித்தால், அந்நாட்டு மக்களில் பாதி பேர் இங்கு வந்துவிடுவார்கள்'. அதற்கு யார் பொறுப்பேற்க முடியும்? ராகுல் காந்தியா? அல்லது சந்திரசேகர் ரெட்டியா?

காங்கிரஸ் போன்ற கட்சிகள் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியர்களுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்துகின்றன. குடியுரிமை சட்டத்திருத்தத்தை மறுஆய்வு செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், பாகிஸ்தான், வங்கதேசத்தைச் சோ்ந்த முஸ்லிம்களுக்காக அதனை மறுஆய்வு செய்ய மாட்டோம். 

Advertisement

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பெரும்பான்மை மதத்தினரால், சிறுபான்மை மதத்தினா் அனுபவித்து வரும் துயரங்களைக் கண்டு மனிதாபிமான அடிப்படையில் அவா்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்க முடிவெடுக்கப்பட்டது.

ஆனால், சில அரசியல் கட்சிகள் அந்நாடுகளைச் சோ்ந்த முஸ்லிம்களுக்கு குடியுரிமை அளிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இந்த விஷயத்தில் தெலங்கானா முதல்வா் சந்திரசேகர் ராவ், அவரது தோழமை கட்சியான மஜ்லீஸ் கட்சி ஆகியோர் வாக்கு வங்கி அரசியல் நடத்துகின்றனர்.

சந்திரசேகா் ராவுக்கும், அவரது கட்சிக்கும் நான் இப்போது ஒரு பகிரங்க சவால் விடுக்கிறேன். நமது நாட்டில் உள்ள 130 கோடி பேரில் ஒருவர் சிஏஏ-வால் பாதிக்கப்பட்டார் என்று நிரூபிக்க முடியுமா? ஒருநாட்டில் உயிர்வாழவே முடியாது என்ற சூழல் ஏற்பட்டு தப்பி வரும் அகதிகளுக்கும், பிற நோக்கங்களுக்காக சட்டவிரோதமாக உள்ள நுழையும் ஊடுருவல்காரா்களுக்கும் இடையே அதிக வேறுபாடுகள் உள்ளன என்று அவர் கூறினார்.  

Advertisement
Advertisement