ஜே & கே ஹண்ட்வாராவில் என்கவுன்டர் நேற்று தொடங்கியது.
Srinagar: ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து 70 கி.மீ தொலைவில்
உள்ள வடக்கு காஷ்மீரின் ஹண்ட்வாரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், ஆயுத படையினர் மற்றும், ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினருக்கும் இடையே நடந்த மோதலில் பாதுகாப்புப் படையினரைச் சேர்ந்த ஐந்து பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதில் கமான்டிங் ஆபிசர் ஒருவரும், 21 ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவின் மேஜர் ஒருவர் மற்றும் 2 பாதுகாப்புப்படை வீரர்களும், பாதுகாப்புப்படையினரைத் தவிர்த்து ஜம்மு-காஷ்மீர் காவல்துறை ஜவான் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை பாதுகாப்புப் படையினர் மற்றும், ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் மூலம் பல பொதுமக்களைப் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்க முடிந்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த மீட்பு நடவடிக்கையில் பயங்கரவாதிகள் இருவர் பாதுகாப்புப்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.
குப்வாரா மாவட்டத்தின் ஹண்ட்வாரா பகுதியில், உள்ள ஒரு வீட்டில், பயங்கரவாதிகள் பொதுமக்கள் சிலரைப் பணையக் கைதிகளாக அழைத்துச் சென்றுள்ளனர் என உளவுத்துறை தெரிவித்த தகவலின் அடிப்படையில், ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் சார்பாக ஒரு கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஐந்து ராணுவக் குழு மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின் போது ஏற்பட்ட மோதலில் மேற்குறிப்பிட்ட உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ளன. இந்த மீட்பு நடவடிக்கையின்போது பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் எனத் அறிக்கை தெரிவிக்கின்றது.