This Article is From Apr 19, 2019

அனுமனை வழிபட்டு வாழ்வில் சிறந்திடுங்கள்!!

நம்பிக்கை, உறுதி, வலிமை, பிரார்த்தனை ஆகியவற்றிற்ர்கு சிறந்த எடுத்து காட்டு பகவான் அனுமன். 

அனுமனை வழிபட்டு வாழ்வில் சிறந்திடுங்கள்!!
New Delhi:

இந்து கடவுளும் வாயு புத்திரனுமான அனுமனின் பிறந்த நாளைதான் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடி வருகிறோம்.  பக்தர்களால் பஜ்ரங்பலி என்று அழைக்கப்படும் அனுமனை வழிபட்டால் கஷ்டங்கள் மற்றும் சோதனைகள் எல்லாம் விலகி வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் அதிகம் இருக்கிறது.  வாயு புத்திரனான அனுமனை பவன்புத்திரன், சங்கடமோட்சன், துக்பஞ்சன் மற்றும் மாருதி நந்தன் என்றும் பக்தர்கள் அன்போடு பூஜிக்கிறார்கள்.  மலையை தூக்கும் வலிமையும், ஆகாயத்தில் பறக்கக்கூடிய சக்தியும் கொண்ட அனுமன் ராம பக்தனாவார்.  ராவணனுடன் போர் செய்து பொறுமைக்கு எடுத்துக்காட்டான சீதா லட்சுமியை ராமனுடன் கொண்டு சேர்த்த பெருமை அனுமனையே சேரும்.  அனுமன் ஜெயந்தி அன்று, அனுமன் சாலிசா அல்லது ராம நாமத்தை உச்சரித்து வருவது மிகவும் நல்லது. 

இந்து நாட்குறிப்புப்படி வருடாவருடம் சித்திரை மாதம் பவுர்ணமி நாளில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.  ஏப்ரல் 18 ஆம் தேதி மாலை 7.26 மணிக்கு தொடங்கும் அனுமன் ஜெயந்தி 19 ஆம் தேதி மாலை 4.41 மணிக்கு நிறைவு பெறுகிறது.  தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலத்தில் 41 நாட்கள் தொடர்ச்சியாக அனுமன் ஜெயந்தி நாள் வரை வழிபாடு நடைபெறும்.  நம் தமிழ்நாட்டில் மார்கழி மாதம், மூல நட்சத்திர நாளில் அனுமன் ஜெயந்தி வழிபாடு தொடங்குகிறது.  கர்நாடகத்தில் ஷுக்லா பக்‌ஷா த்ரயோதஷி என்று மார்கஷிர்ஷா மாதத்தில் கொண்டாடப்படுகிறது.  இதனை அனுமன் விரதம் என்றும் அழைப்பர்.  நம்பிக்கை, உறுதி, வலிமை, பிரார்த்தனை ஆகியவற்றிற்ர்கு சிறந்த எடுத்து காட்டு பகவான் அனுமன்.  ஆகவே, அனுமனை வழிபட்டு வாழ்வில் சிறந்த நிலைக்கு செல்ல அனைவருக்கும் எங்கள் பிரார்த்தனைகள். 

அனுமன் ஜெயந்தி வாழ்த்துக்கள். 

.