This Article is From Aug 12, 2019

நாடு முழுவதும் உற்சாகத்துடன் பக்ரீத் கொண்டாட்டம்: மசூதிகளில் சிறப்பு தொழுகை!

EidAlAdha: இறைதூதர் இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா முழுதும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.

Advertisement
இந்தியா Written by

EidMubarak: இந்தியா முழுதும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.

தியாகத் திருநாளான பக்ரீத் (Bakrid) பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள மசூதிகளில், சிறப்புத் தொழுகைகள் நடத்தப்பட்டது. 

இஸ்லாமியர்களின் இறைதூதர் இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா முழுதும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. 

டெல்லி ஜமா மசூதி, போபால் ஈத்கா மசூதி, மும்பை ஹமிதியா மசூதி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பல லட்சம் இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். மும்பையில் உள்ள ஹமிதியா மசூதியில், ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகைகள் நடத்தினர். 

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, டெல்லியின் காஷ்மீர் கேட் பகுதியில் உள்ள பஞ்ச ஷரீஃப் தர்காவில், தியாகத் திருநாளையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் கலந்துகொண்டார்.

Advertisement

மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள இத்கா மசூதியில் திரண்ட பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், சிறப்பு தொழுகைகள் செய்து ஒருவரையொருவர் கட்டியணைத்து வாழ்த்துக்களைக் பரிமாறிக் கொண்டனர் (EidMubarak).

தியாகத் திருநாளான இன்று இஸ்லாமியர்கள் தொழுகையை முடித்து வீடு திரும்பியதும் இறைவனுக்கு ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை குர்பானி எனப்படும் புனித பலி கொடுக்கின்றனர். அந்த இறைச்சியில் குறிப்பிட்ட பங்கை உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஏழைகளுக்கு கொடுத்து மகிழ்கின்றனர். 

Advertisement
Advertisement