Happy Birthday Google: செப்.2019-ம் ஆண்டின் படி, கூகுளின் மொத்த மதிப்பு 300 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது.
New Delhi: 21 ஆண்டுகளுக்கு முன்பு தான் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான கூகுள் ஒரு பெரிய அளவிலான தேடுபொறியின் முன்மாதிரி ஒன்றை அமைத்தது. அதன் முதல், உலகின் மிகப்பெரிய தேடுபொறி தளமாக விளங்கி வரும் கூகுள் நிறுவனத்தின் 21வது பிறந்த நாள் இன்று கொண்டாடி வருகிறது.
அந்தவகையில், இன்றைய டூடுலில் பழைய மாடல் கம்பியூட்டர் ஒன்றின் முகப்பு பக்கத்தில் கூகுள் சர்ச் இன்ஞின் புகைப்படம் தெரிகிறது. மேலும் அந்த டூடுலில் 27-9-98 அதன் பிறந்த தினமும் தெரிகிறது.
இன்று நமக்குத் தெரியும் இந்த மிகப்பெரிய தேடுபொறி, இரண்டு கணினி பட்டதாரி மாணவர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. அவர்கள் தங்களது அறைகளில் இருந்தபடியே ‘பேக்ரப்'(Backrub) என்ற தேடுபொறி போர்ட்டலை உருவாக்க வேலை செய்தனர்.
கூகுள் நிறுவனர்கள் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின்
இதுதொடர்பாக அவர்கள் இருவரும் கூறும்போது, கூகுள் உருவாகுவதற்கு பேக்ரப்பே எங்களுக்கு அடித்தளமாக அமைந்தது. பின்னர் அதுவே சில வருடங்களில் கூகுளாக வளர்ந்தது. நாங்கள் எங்கள் நிறுவனத்திற்கு கூகுள் என பெயர் வைத்தோம் எனெனில், googol, அல்லது 10100 என்பது பொதுவான பெயராக இருந்தது. இது எங்களது இலக்கை பெரும் தேடுபொறியாக உயர்த்த சரியாக இருந்தது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தேடுபொறி பரவலாக பிரபலமடைந்ததை தொடர்ந்து, சன்மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனம் நிதி உதவி வழங்கியதை தொடர்ந்து அது மாபெரும் கூகுள் தேடுபொறியாக மாறியது. இதைத்தொடர்ந்து, கூகுள் கலிபோர்னியாவில் தனது முதல் அலுவலகத்தை தொடங்கியது.
2001-ம் ஆண்டில், கூகுள் அதன் தொழில்நுட்பத்திற்கான காப்புரிமையைப் பெற்றது, மேலும், லாரி பேஜ் அதன் கண்டுபிடிப்பாளராக தெரிவிக்கப்பட்டார். இதன் பின்னர் தான் நிறுவனம் பொது வெளிக்கு சென்றது. இதைதொடர்ந்து, பல ஆண்டுகளாக, கூகுள் ஜிமெயில், கூகுள் டிரைவ், கூகுள் டாக்ஸ் மற்றும் கூகுள் குரோம் என்ற வெப் பிரவுசர் போன்ற தயாரிப்புகளை வரிசையாக அறிமுகப்படுத்தியது.
தொடர்ந்து, வீடியோ போர்டல் யூடியூப்பை பெற்றது பின்னால் அது, ஸ்மார்ட்போன்கள், மொபைல் கணினி வன்பொருள், ஸ்மார்ட் ஸ்பீக்கர் (கூகிள் ஹோம்) மற்றும் சுய-ஓட்டுநர் கார்கள் வரை விரிவுபடுத்தியது.
செப்டம்பர் 2019-ம் ஆண்டின் படி, கூகுளின் மொத்த மதிப்பு 300 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. அமேசான் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தை தொடர்ந்து, மூன்றாவது பெரும் நிறுவனமாக கூகுள் திகழ்ந்து வருகிறது.