This Article is From Jan 25, 2019

குடியரசுத் தினம்: தெரிந்து கொள்ள வேண்டிய 15 தகவல்கள்

2019 Republic Day:இந்தக் கொண்டாட்டமான நாளைப் பற்றிய் 15 முக்கியத் தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

Advertisement
இந்தியா Posted by

Republic Day Parade 2019: குடியரசு தினத்தில் இந்திய விமானப் படை உருவானது.

நாளை 70 வது குடியரசுத் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. இந்தியக் குடியரசுத்தலைவர் ராஜ்பாத்தில் தேசியக் கொடியை ஏற்றிவார். இந்திய ராணுவத்தின் பெருமை மிகு அணிவரிசையும் நடைபெறும். ராணுவத்தின்  முப்படை அணிவகுப்பும் நடைபெறும். நாட்டின் பன்மைத்துவத்தை வெளிக்காட்டும் விதமாக பல மாநிலங்களின் முக்கியமான கலையும் அரங்கேறும். இந்தக் கொண்டாட்டமான நாளைப் பற்றிய் 15 முக்கியத் தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம். 

  1. 1947-ல் சுதந்திரம் பெற்ற ஆண்டுகளுக்குப் பின்பு, முதல் குடியரசு தினம் ஜனவரி 26-ம் நாள் 1950ல் கொண்டாடப்பட்டது.  
  2. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26, காலை 10.18 மணியளவில் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.
  3. இந்திய அரசியலைமைப்புதான் உலகிலேயே மிகப் பெரியது. இதில் 444 ஆர்ட்டிகிள்கள் உள்ளன.
  4. டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் இந்திய அரசியலைமைப்பின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இந்திய அரசியலைப்புச் சட்டத்தை உருவாக்கினார்.
  5. முதல் குடியரசு தினத்திற்கு இந்தோனேசிய அதிபர் சுக்கர்னோ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். 
  6. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முன் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட பிரிட்டீஷ் அரசின், இந்திய அரசாங்கச் சட்டம் 1935 என்பதே செயல்பட்டுக் கொண்டிருந்தது.
  7. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கைப்பட எழுதப்பட்டது.
  8. முதல் இந்திய ராணுவ அணிவகுப்பு 1955 ராஜ்பாத்தில் நடைபெற்றது. 
  9. குடியரசு தின அணிவகுப்பில்  Abide With Me என்ற  ஒரு கிறித்துவப் பாடல் ஒன்று இடம் பெறும். இந்தப் பாடல் மகாத்மா காந்திக்கு பிடித்தமான பாடல் என்று நம்பப்படுகிறது. 
  10. குடியரசுத் தினக் கொண்டாட்டம் மூன்று நாள் அதாவது ஜனவரி 29 வரைக் கொண்டாடப்படும்.
  11. ஜனவரி 26, 1965-ல் இந்தியை தேசிய மொழியாக அறிவித்தனர். 
  12. இந்தியாவின் அரசியலமைப்பு மற்ற நாடுகளின் அரசியலமைப்பில் இருந்து மிகவும் மேம்பட்டது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்,ஆகியவை பிரெஞ்சு அரசியலமைப்பிலிருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டன. 
  13. குடியரசுத் தினத்தில் தேசிய விருதுகளான பாரத் ரத்னா, கீர்த்தி சக்ரா, பத்மா விருதுகள் அறிவிக்கப்படும். 
  14. குடியரசு தினத்தில் இந்திய விமானப் படை உருவானது.
  15. ஒவ்வொரு வருடமும் குடியரசுத் தலைவர் 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றுவார்.
Advertisement