This Article is From Jan 25, 2019

குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் 5 ஆயிரம் போலீசார் குவிப்பு

2019 Republic Day : அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக சென்னை மெரினா கடற்கரையிலும், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
தமிழ்நாடு Posted by

Republic Day Parade 2019 : சென்னை மெரினா கடற்கரை சாலையில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறவுள்ளது.

Highlights

  • தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்
  • சென்னை மெரினாவில் அணிவகுப்பு நடைபெறவுள்ளது
  • வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் சுமார் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் 1 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளது. கொண்டாட்ட நிகழ்ச்சிகளை தேச விரோத சக்திகள் சீர்குலைக்க முயற்சிக்கலாம் என்பதால் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையை பொறுத்தளவில் மெரினா கடற்கரை வழியே செல்லும் காமராஜர் சாலையில் போலீசாரின் அணி வகுப்பு நடத்தப்பட உள்ளது. இதையொட்டி அங்கு மட்டும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

அணிவகுப்பை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் காமராஜர் சாலையின் இருபக்கத்திலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 

Advertisement

பாதுகாப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக வாகன தணிக்கை அதிகளவு செய்யப்படுகிறது. மக்கள் கூடும் இடங்களில் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். 

Advertisement