This Article is From Apr 14, 2019

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்: சித்திரை திருமகளை வரவேற்போம்

Tamil New Year 2019: கேரள மக்கள் விஷு என்றும், அசாம் மக்கள் பிஹு என்றும், பஞ்சாப் மக்கள் வைஷாகி என்றும், மேற்கு வங்க மக்கள் பொஹெலா பொய்ஷாக் என்றும் பெயரிட்டு அழைக்கின்றனர்.

Advertisement
தமிழ்நாடு Posted by

Puthandu Vazthukal 2019 : இந்த ஆண்டை விகாரி என்று அழைக்கின்றனர்

சித்திரை தமிழ் புத்தாண்டை விகாரி வருடம் என்று அழைக்கின்றனர், இந்நாளில், அரசு விடுமுறை அளித்து வருகிறது. இந்த புத்தாண்டு (Puthandu) தினம் இலங்கை மற்றும் இன்னபிற தமிழ் பேசும் நாடுகளில் கோலகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதேசமயம் கேரள மக்கள் விஷு என்றும், அசாம் மக்கள் பிஹு என்றும், பஞ்சாப் மக்கள் வைஷாகி என்றும், மேற்கு வங்க மக்கள் பொஹெலா பொய்ஷாக் என்றும் பெயரிட்டு அழைக்கின்றனர்.

இவர்களோடு மணிப்பூர், திரிபுரா, ஒடிசா, பிஹார், உத்தரப்பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மக்களும் புத்தாண்டை பல்வேறு பெயர்கள் இட்டு அழைத்து, கொண்டாடி மகிழ்கின்றனர்.

இன்று சித்திரை ஒன்று தமிழ் புத்தாண்டு வாழ்வில் வளங்கள் என்றும் நிறைந்திருக்க வேண்டும் என்பதைப் போல, குறைவில்லா உணவுச் செல்வத்துடன் மகிழ்ந்திருக்க வேண்டும் என்று சமையல் செய்யப்படும். 6 சுவை உணவுகள் அதில் இருக்குமாறு கவனித்துக் கொள்வார்கள். இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, காரம், உவர்ப்பு என ஒவ்வொரு சுவைக்கும் ஒவ்வொரு உணவு பரிமாறப்படும்.

Advertisement

இந்த தமிழ் வருடப் பிறப்பையொட்டி (Tamil New Year) பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மக்கள் நீதி மய்யத் தலைவர் நடிகர் கமலஹாசன் புத்தாண்டு வாழ்த்தினை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பல கோவில்களில் சிறப்பு விசேச பூஜைகள் செய்யபட்டு வருகிறது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் விஷூ கனி தரிசனத்தை பக்தர்கள் பலரும் வழிபட்டு வருகின்றனர்.

Advertisement

இன்றைய நாளில் வெயிலை சமாளிக்கும் வகையில் பல உணவு வகைகள் செய்யப்படும்.

தமிழ் மாதத்தின் முதல் மாதமான சித்திரைப் பிறப்பில், தர்ப்பணம் செய்து முன்னோரை ஆராதனை செய்வதும் வழக்கம்.ஒவ்வொரு தமிழ் மாதமும் பிறக்கிற நாளான மாதப் பிறப்பு என்கிற நாட்களிலெல்லாம் தர்ப்பணம் செய்யவேண்டும் என்றும் முன்னோரை ஆராதிக்கவேண்டும் என்றும் அவர்களை அந்த நாளில் வணங்கவேண்டும் என்பதும் வழக்கம்.
 

Advertisement