This Article is From Jul 25, 2018

வன்முறையில் ஈடுபட்ட வழக்கு: ஹர்திக் படேல் குற்றவாளி எனத் தீர்ப்பு!

படேல் சமூக மக்களுக்காக குஜராத்தில் போராட்டத்தை முன்னெடுத்த ஹர்திக் படேல், வன்முறையில் ஈடுபட்ட வழக்கு ஒன்றில் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

வன்முறையில் ஈடுபட்ட வழக்கு: ஹர்திக் படேல் குற்றவாளி எனத் தீர்ப்பு!
Visnagar:

படேல் சமூக மக்களுக்காக குஜராத்தில் போராட்டத்தை முன்னெடுத்த ஹர்திக் படேல், வன்முறையில் ஈடுபட்ட வழக்கு ஒன்றில் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு, ஹர்திக் படேல், குஜராத்தில் இருக்கும் படேல் சமூக மக்களுக்கு அரசு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் தனியே இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று கோரி மாநிலம் தழுவிய அளவில் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தார். 2015 ஆம் ஆண்டு, ஜூலை 15 ஆம் தேதி, விஸ்நகரில் இருக்கும் பாஜக எம்.எல்.ஏ ருஷிகேஷ் படேலின் அலுவலகத்தை சூரையாடியதாக ஹர்திக் மற்றும் 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

பட்டிதர் அனாமத் அந்தோலன் சமிதி கட்சியின் தலைவராக இருக்கும் ஹர்திக் மீது விஸ்நகர் போலீஸ் வன்முறையில் ஈடுபட்டதற்காக வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் அந்த வழக்கு விசாரணை முடிந்து, ஹர்திக் படேல் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம், வழக்கில் சம்பந்தப்பட்ட ஹர்திக் படேல் ஆஜராவாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கைது வாரன்ட் பிறப்பித்தது விஸ்நகர் கீழ்நிலை நீதிமன்றம். 

இது ஒருபுறமிருக்க, இந்த மாத தொடக்கத்தில் ஹர்திக், ‘படேல் சமூக மக்களுக்கு அரசு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணவிரதத்தில் ஈடுபடப் போகிறேன்’ என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

.