This Article is From Dec 30, 2019

“அறவழி இல்ல… எந்த எல்லைக்கும் போவோம்..!”- EPS, OPS-ஐ எச்சரித்த ஹரி நாடார்!

"அறவழியில் மட்டும் நாங்கள் போராடுகிறோம் என்று தமிழக அரசு நினைத்துவிட வேண்டாம்"

Advertisement
தமிழ்நாடு Written by

"உரிமைகளை மீட்டெடுக்க எந்த எல்லைக்கும் செல்வோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்."

பனங்காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசியுள்ளார். 

தூத்துக்குடி மாநகராட்சியை பொதுப் பிரிவில் இருந்து பட்டியலினப் பிரிவுக்கு மாற்றியதைக் கண்டித்து, பனங்காட்டுப் படை சார்பில் ஆர்ப்பாடம் ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் பேசிய ஹரி நாடார், “கொங்குப் பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் கவுண்டர் சமூகம் அதிகமாக இருக்கிறது. அதேபோல தென் மாவட்டங்களின் பல இடங்களில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சார்ந்த தேவர் சமூகம் அதிகமாக இருக்கிறது. அந்த இடங்களில் தூத்துக்குடியை மாற்றியது போல மாற்றுவார்களா..?

தூத்துக்குடியில் நாடார் சமூகத்தினர் அதிகமாக இருக்கிறார்கள். அங்கு மட்டும் தூத்துக்குடி மாநகராட்சியை பொதுப் பிரவிலிருந்து பட்டியலினப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதை எங்களால் ஒரு நாளும் ஏற்றுக் கொள்ள முடியாது. அறவழியில் மட்டும் நாங்கள் போராடுகிறோம் என்று தமிழக அரசு நினைத்துவிட வேண்டாம். உரிமைகளை மீட்டெடுக்க எந்த எல்லைக்கும் செல்வோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக அமைச்சரவையில் முன்பு இருந்தது போல 2 நாடார் சமூகத்தினருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும். மாநிலத்தில் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடார்களை பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும்,” என்று ஆவேசமாக பேசினார். 


 

Advertisement
Advertisement