காங்கிரஸ் போன்ற கட்சியினால் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாது -பிரதமர்
Gohana: பிரதமர் நரேந்திர மோடி ஹரியானா மாநிலம் சோனிபட்டில் கோஹானாவில் நடந்த தேர்தல் பேரணியில் உரையாற்றினார். காங்கிரஸ் கட்சியினால் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவோ துணிச்சலான வீரர்கள் செய்த தியாகங்களை மதிக்கவோ முடியாது என்று கூறினார்.
"ஆகஸ்ட் 5 அன்று நடந்தது என்ன? யாரும் நினைத்து பார்க்க முடியாதது. இந்தியாவின் அரசியலமைப்பு ஜம்மு காஷ்மீருக்கும் பொருந்தும் என்ற மிக முக்கியமான முடிவு எடுக்கப்பட்டது."
தனது அரசாங்கம் தேசிய நலனுக்காக இந்த முடிவை எடுத்த போதும் “ஆனால் காங்கிரஸ் போன்ற கட்சியினால் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
உங்களால் முடிந்தவரை என்னை விமர்சிக்க முடியும். ஆனால், குறைந்த பட்சம் பாரதத்திற்கு மரியாதை கொடுங்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.
சோனிபட் மாவட்டம், முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடாவின் கோட்டையாக கருதப்படுகிறது.
இருப்பினும் ஹூடா மற்றும் அவரது மகன் தீபந்தர் சிங் ஹீடா நாடாளுமன்ற தேர்தலிலும், மக்களவைத் தேர்தலிலும் தோற்கடிக்கப்பட்டனர்.
பிரதமர் சோனிபட்டை “விவசாயிகள், வீரர்கள் மற்றும் மல்யுத்த வீரர்களின் நிலம் என்று குறிப்பிட்டார்.