This Article is From Oct 21, 2019

''போதை பொருட்களை இந்தியாவுக்குள் கடத்தி இளைஞர்களை சீரழிக்கிறது பாகிஸ்தான்'' - மோடி

'ஃபிட் இந்தியா (Fit India)' விழிப்புணர்வு பிரசாரத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதில் இளைஞர்கள் பங்கேற்று தங்களது உடலை வலிமையாக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று இளைஞர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

Advertisement
இந்தியா Edited by

அரியானாவில் நாளை மறுதினம் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

Ellenabad :

போதைப் பொருட்களை இந்தியாவுக்குள் கடத்திய இந்திய இளைஞர்களை பாகிஸ்தான் நாசம் செய்வதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். 

அரியானாவில் நாளை மறுதினம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அம்மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். 

பொதுக் கூட்டத்தில் மோடி பேசியதாவது-

ஃபிட் இந்தியா (Fit India)' விழிப்புணர்வு பிரசாரத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதில் இளைஞர்கள் பங்கேற்று தங்களது உடலை வலிமையாக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். 

Advertisement

போதைப் பொருளுக்கு எதிராக நாம் போராட வேண்டியுள்ளது. அதனால் தனிப்பட்ட நபர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. ஒட்டுமொத்த குடும்பமும், சமூகமும், நாடும் போதைப் பொருளால் பாதிக்கப்படுகிறது.

பக்கத்து நாடான பாகிஸ்தான் போதைப் பொருளை இந்தியாவுக்குள் கடத்தி இந்திய இளைஞர்களை சீரழிக்கிறது. தீவிரவாதிகள் மற்றும் ஆயுதங்களால் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பல சதிகளை செய்தது. இவை முறியடிக்கப்பட்டதால் போதைப்பொருள் மூலம் இந்தியாவை சீரழிக்க பாகிஸ்தான் பார்க்கிறது. 

Advertisement

இந்திய இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாக வேண்டும் என்பதுதான் பாகிஸ்தான் எண்ணம். இதனை நாம் தடுக்க வேண்டும். 

இவ்வாறு மோடி பேசினார். 

Advertisement