This Article is From Aug 24, 2020

ஹரியானா முதல்வர் எம்.எல். கட்டாருக்கு கொரோனா தொற்று உறுதி!

சட்டமன்றத்திற்குள் நுழையும் முன்னர் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் என்றும், மூன்று நாட்களுக்கு முன்னதாக பெற்றது மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா முதல்வர் எம்.எல். கட்டாருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஹரியானா முதல்வர் எம்.எல். கட்டாருக்கு கொரோனா தொற்று உறுதி

ஹைலைட்ஸ்

  • தான் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்
  • தொடர்பில் இருந்தவர்கள் தங்களை உடனடியாக தனிமைப்படுத்திக்கொண்டு
  • பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என கோரியுள்ளார்.
Chandigarh:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 31 லட்சத்தினை கடந்துள்ள நிலையில், தற்போது இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் பட்டியலில் ஹரியான முதல்வர் மனோகர் லால் கட்டர் புதியதாக இணைந்துள்ளார். இன்று பரிசோதனையை மேற்கொண்ட அவர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தான் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தன்னுடன் கடந்த ஒரு வாரக்காலமாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை உடனடியாக தனிமைப்படுத்திக்கொண்டு பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஹரியானா சட்டமன்ற சபாநாயகர் கியான் சந்த் குப்தா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் முதல்வரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட கூட்டத்தொடருக்கு துணை சபாநாயகர் ரன்பீர் கங்வா தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கட்டர் தொற்றால் பாதிக்கப்படுவதற்கு முன்னர் சபாநாயகர் விரைவில் குணமடைந்து வர வேண்டுமென தான் வேண்டிக்கொள்வதாக தெரிவித்திருந்தார்.

தற்போது முதல்வர், சபாநாயகரைத் தொடர்ந்து இரண்டு எம்.எல்.ஏக்களும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், தொற்று இல்லாதவர்கள் மட்டுமே கூட்டத்தொடரில் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத்திற்குள் நுழையும் முன்னர் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் என்றும், மூன்று நாட்களுக்கு முன்னதாக பெற்றது மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாத்தில் மத்திய அமைச்சர் உட்பட நாட்டின் பல மாநில முதல்வர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். சிலர் மீண்டு திரும்பியுள்ளனர்.  ஆனாலும் தனிமைப்படுத்துதலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

With inputs from PTI

.