காவல்துறையினரால் மீட்கப்பட்டு நலமாக உள்ளார். (File)
Shimla: ஹரியானாவைச் சேர்ந்த 25 வயது சுற்றுலா பயணி ஒருவர் இமாச்சல பிரதேசத்தின் மணாலியில் உள்ள பியாஸ் ஆற்றில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விழுந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினரும் தீயணைப்பு படையினரும் தகவல் கிடைத்து உடனே சம்பவ இடத்திற்கு வந்து தவறி விழுந்த லலித் யாதவை மீட்டனர்.
அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தற்போது நலமாக உள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆபத்தான சம்பவங்களை தவிர்ப்பதற்காக, மழையின் போது ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களுக்கு அருகில் செல்ல வேண்டுமென மாவட்ட நிர்வாகிகள் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.