Read in English
This Article is From Sep 06, 2019

Jailbreak: சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் சிறையில் இருந்து தப்பிச் சென்ற கைதி!

டெல்லியில் இருந்து 166 கி.மீ தூரத்தில் உள்ள ஆழ்வார் பகுதியில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்குள் இன்று காலை திடீரென புகுந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று, ஸ்டேஷன் கட்டிடத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது.

Advertisement
இந்தியா Edited by

ஹரியானாவின் மகேந்திரஹாரில் 7 கிரிமினல் வழக்குகளில் தேடப்படுபவர் விக்ரம் குஜ்ஜார்

Alwar:

ஹரியானாவில் முக்கிய குற்றவாளியான ஒருவன் சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் இன்று காலை ராஜஸ்தானில் உள்ள காவல் நிலையத்தின் சிறையில் தப்பித்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லியில் இருந்து 166 கி.மீ தூரத்தில் உள்ள ஆல்வார் பகுதியில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்குள் இன்று காலை திடீரென புகுந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று, ஸ்டேஷன் கட்டிடத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இதைத்தொடர்ந்து, அந்த கும்பல் பூட்டப்பட்டிருந்த காவல் நிலைய சிறையில் இருந்து விக்ரம் குஜ்ஜாரை மீட்டுச்சென்றது. 
 



இந்த கும்பல் பயன்படுத்தியது ஏகே-47 துப்பாகிகளாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிகளை பயன்படுத்தி காவல் நிலைய கட்டடத்தில், 25 சுற்றுகள் சுட்டுள்ளனர். எனினும், இந்த துப்பாக்கிச்சூட்டில் யாரும் காயம் அடையவில்லை என்று தெரிவித்துள்ளனர்.  

தப்பிச்சென்ற முக்கிய குற்றவாளியான விக்ரம் குஜ்ஜார் மீது ஹரியானாவின் மகேந்திராஹாரில் 7 கிரிமினல் வழக்குகளில் தேடப்படுபவன் ஆவான். 

மூத்த காவல்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் இருக்கும்போதே, குற்றவாளி ஒருவன் சிறையில் இருந்து துணிச்சலாக தப்பிச்சென்றுள்ள சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

எனினும் இந்த கும்பலை பிடிப்பதற்கு ஆழ்வார் பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 
 
Advertisement