This Article is From May 16, 2019

எங்களுக்கு பிரதமர் பதவி கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை: காங்கிரஸ் ஓப்பன் டாக்!

“எங்களுக்கு பிரதமர் பதவி கிடைக்கவில்லை என்றால், வேறு யாருக்கும் அது கிடைக்கக் கூடாது என்று வலியுறுத்த மாட்டோம்”

எங்களுக்கு பிரதமர் பதவி கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை: காங்கிரஸ் ஓப்பன் டாக்!

இரண்டு நாட்களுக்கு முன்னர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எதிர்க்கட்சிகளை விமர்சித்திருந்தார்.

Patna:

நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைய இன்னும் ஒரு கட்ட வாக்குப்பதிவே பாக்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி குலாம் நபி அசாத், “எங்கள் கட்சிக்குப் பிரதமர் பதவி கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. எங்களின் முக்கிய நோக்கம் பாஜக தலைமையிலான ஆட்சியை வீழ்த்துவதுதான்” என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர், “நாங்கள் எங்கள் நிலைப்பாடு குறித்து ஏற்கெனவே தெளிவாக கூறியுள்ளோம். எங்களுக்கு இந்தத் தேர்தலில் அதிக தொகுதிகள் கிடைத்தால், எங்கள் கட்சியில் இருப்பவர்தான் பிரதமர் ஆவார். ஆனால் அப்படியில்லை என்றாலும் பிரச்னை இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதுதான் எங்களின் முக்கிய குறிக்கோள். அத்றகு ஏற்றாற் போல நாங்கள் முடிவெடுக்கத் தயார்” என்று பாட்னாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். 

அவர் மேலும், “எங்களுக்கு பிரதமர் பதவி கிடைக்கவில்லை என்றால், வேறு யாருக்கும் அது கிடைக்கக் கூடாது என்று நாங்கள் வலியுறுத்த மாட்டோம்” என்றார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “லோக்சபா தேர்தலில் வெற்றி உறுதி என்று நினைக்கும் எதிர்க்கட்சிகள், தங்களின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்” என்று கூறினார். 

தேசிய ஜனநாயகக் கூட்டணி தரப்பில், “எதிர்க்கட்சிகள் இடையில் ஒற்றுமையே கிடையாது. எதிக்கட்சித் தலைவர்கள் அனைவரும், பிரதமர் பதவி தங்களுக்கு வேண்டும் என்று நினைக்கிறார்கள்” என்று தொடர்ந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.


 

.