கடந்த ஆண்டு ஹாசின் ஜகான், முகநூல் மூலம் ஷமியின் மீதும் ஷமியின் குடும்பத்தார் மீதும் பல்வேறு அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்
New Delhi: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தன்னை வன்முறை பயன்படுத்தி துன்புறுத்தியதாக அவரது மனைவி ஹாசின் ஜகான், கொல்கத்தாவில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் நீதிமன்றம், ஷமியை கைது செய்ய வாரன்ட் பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை வரவேற்றுள்ளார் ஜகான்.
“நீதித் துறைக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். கடந்த ஓராண்டாக எனக்கு நீதி கிடைக்கப் போராடிக் கொண்டிருந்தேன். உங்கள் எல்லோருக்கும் தெரியும்… ஷமி, தன்னை ஒரு மிகவும் அதிகாரமிக்க மனிதன் என்றும், பெரிய கிரிக்கெட் வீரர் என்றும் நினைக்கிறார்.
நான் மேற்கு வங்கத்தில் பிறந்திருக்கவில்லை என்றாலோ, மம்தா பானர்ஜி எனது முதல்வராக இருக்கவில்லை என்றாலோ, நான் இங்கு நிம்மதியாகவும் பாதுகாப்பாவும் வாழ்ந்திருக்க முடியாது. உத்தர பிரதேசத்தின் அம்ரோகா காவல் நிலையத்தில் என்னையும் எனது மகளையும் துன்புறத்தப் பார்த்தார்கள். கடவுளின் கருணையால் நாங்கள் தப்பித்தோம்” என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தகவல் தெரிவித்துள்ளார்.
ஷமியைத் தவிர்த்து, அவரது சகோதரரான ஹாசித் அகமதுக்கும் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது.
முகமது ஷமியும் ஹாசின் ஜகானும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த ஆண்டு ஹாசின் ஜகான், முகநூல் மூலம் ஷமியின் மீதும் ஷமியின் குடும்பத்தார் மீதும் பல்வேறு அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பல பெண்களுடன் ஷமி தொடர்பில் இருப்பதாகவும் அவர் அப்போது கூறி பரபரப்பு கிளப்பினார். அதற்கு ஆதரமாக பல மொபைல் ஸ்க்ரீன்-ஷாட்களையும் ஜகான் வெளியிட்டார்.
தன் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்த ஷமி, தன்னை அவமானப்படுத்தவே இப்படி புகார் சொல்லப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம், தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்தார் என்றும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்றும் ஷமி மீது குற்றம் சாட்டினார் ஜகான். மேலும் மாத செலவுக்கு 7 லட்ச ரூபாயும் கேட்டார்.
முகமது ஷமியும் ஹாசின் ஜகானும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
(ANI தகவல்களுடன்)