Read in English
This Article is From Dec 13, 2019

முடிவுக்கு வருகிறதா USA - China இடையிலான வர்த்தகப் போர்..? - சீனா வெளியிட்ட முக்கிய தகவல்!

இதை உறுதி செய்யும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், சீனா மீது விதிக்கவிருந்த புதிய வர்த்தகக் கட்டுப்பாடுகளை நீக்குவதாக அறிவித்துள்ளார்.

Advertisement
உலகம் Edited by

இரு நாடுகளும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாகவும் தெரிகிறது.

Beijing:

உலகின் இரண்டு மிகப் பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் வர்த்தகப் போர் நிலவி வந்த நிலையில், அது முடிவுக்கு வரும் என்று தெரிகிறது. இது குறித்து சீன அரசு தரப்பு, வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “அமெரிக்காவுடனான வர்த்தக உறவு தொடர்பாக முதல் கட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம்,” என்றுள்ளது.

மேலும் சீனத் தரப்புக் கூறுகையில், “இரு நாடுகளும் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் தொடர்பாக ஒருமித்த முடிவுக்கு வருவதாக எழுத்துப்பூர்வமாக முடிவெடுத்துள்ளன,” என்று சீனாவின் துணை வர்த்தக அமைச்சர் வாங் ஷோவென் செய்தியாளர்கள் மத்தியில் பேசியுள்ளார். 

இரு நாடுகளும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
 

இதை உறுதி செய்யும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், சீனா மீது விதிக்கவிருந்த புதிய வர்த்தகக் கட்டுப்பாடுகளை நீக்குவதாக அறிவித்துள்ளார்.

Advertisement

“சீனா மீது வர்த்தக நடவடிக்கை எடுக்கப்படாது. காரணம், இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது,” என்று ட்விட்டர் பக்கம் மூலம் தகவல் தெரிவித்துள்ளார் டிரம்ப். இந்த வார இறுதியில் சீனப் பொருட்கள் மீது கூடுதலாக வரி விதிக்க இருந்தது அமெரிக்க அரசு. அதுதான் தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.

தற்போது 250 மில்லியன் டாலர் அளவு கொண்ட சீன இறுக்குமதிப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 25 சதவிகித வரி நீடிக்கும் என்றும், இரண்டாம் கட்ட ஒப்பந்தத்தைப் பொறுத்து அது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். 

Advertisement
Advertisement