This Article is From Mar 04, 2019

உர இறக்குமதிக்கு தீர்வு காண! - நிதின் கட்கரியின் சிறுநீரை சேமிக்கும் யோசனை!

மனிதர்களின் சிறுநீர் மூலம் எரிபொருள் உருவாக்கவும், அதிலிருந்து அமோனியம் சல்பேட் மற்றும் நைட்ரோஜெனை பெறலாம் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கிரி தெரிவித்துள்ளார்.

உர இறக்குமதிக்கு தீர்வு காண! - நிதின் கட்கரியின் சிறுநீரை சேமிக்கும் யோசனை!

என் யோசனைகள் நன்றாக இருப்பதால் மற்றவர்கள் எனக்கு ஒத்துழைப்பு தரமாட்டார்கள்.

Nagpur:

தனது பல்வேறு புதிய யோசனைகளை தெரிவித்து வந்தாலும் அதனை யாரும் செயல்படுத்த முன்வராத நிலையில், தற்போது தன் புதிய யோசனை ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. அதாவது, மனித சிறுநீரை சேமித்து வைப்பதே அந்த புதிய யோசனை.

இவ்வாறு மனித சிறுநீரை சேகரித்து வைப்பதன் மூலம் உர இறக்குமதிக்கு முடிவு கட்ட முடியும் என்கிறார். நாக்பூர் நகராட்சி சார்பில் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்கரி, இந்த புதிய யோசனை அந்த கூட்டத்தில் முன்வைத்தார். 

மனிதர்களின் சிறுநீர் மூலம் எரிபொருள் உருவாக்கவும், அதிலிருந்து அமோனியம் சல்பேட் மற்றும் நைட்ரோஜெனை பெறலாம் என்றும் அவர் கூறியுள்ளார். 

விமான நிலையங்களில் சிறநீரை சேமிக்க வலியுறுத்தியுள்ளேன். நாம் உரங்களை இறக்குமதி செய்து வருகிறோம். ஆனால் ஒட்டுமொத்த நாடும் சிறுநீரைச் சேமிக்கும் பட்சத்தில், நாம் உரத்தை இறக்குமதி செய்யவேண்டிய தேவை இருக்காது, இதன் மூலம் எந்த இழப்பும் ஏற்பட போவதில்லை. 

மேலும், எனது யோசனைகள் நன்றாக இருப்பதால் மற்றவர்கள் எனக்கு ஒத்துழைப்பு தரமாட்டார்கள். ஏன் நகராட்சி கூட எனக்கு ஒத்துழைப்பு தராது. ஏனென்றால், அரசாங்கத்தால் மக்கள் கண்மூடித்தனமாக நடந்து செல்லும் எருதுகளை போலவே பயிற்றுவிக்கப்படுகின்றனர் அதனால், அவர்கள் மற்ற யோசனைகளை ஏற்கமாட்டார்கள் என்றார். 

இயற்கை கழிவுகளிலிருந்து எரிபொருட்கள் எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகிறது என்பதை உதாரணம் காட்டி அவர் இதனை கூறினார். இதேபோல், மனித முடி கழிவுகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் அமினோ அமிலத்தை உரமாக பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறினார். 

கடந்த சில வருடங்களுக்கு முன்பு, தனது வீட்டுத்தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தனது சிறுநீரை சேமித்து வைத்து, அதனை ஊற்றியே செடிகளை வளர்த்ததாக நிதின் கட்கரி கூறியிருந்தார்.

 

மேலும் படிக்க - "தமிழக மீனவர் பிரச்னைக்கு என்ன தீர்வு? – ப.சிதம்பரம் விளக்கம்"

.