New Delhi: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 24 லட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் தற்காலிகமாக மார்ச் மாதத்திலிருந்து முடங்கியுள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகளில், இறுதி செமஸ்டர் தேர்வைத் தவிர்த்து மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் கல்லூரி மாணவர்களுக்கான இறுதி தேர்வும் ரத்து செய்யப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியிருந்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது, கல்லூரிகளில் இறுதி தேர்வினை நடத்த மத்திய அரசு பல்கலைக்கழக மானிய குழுவிற்கு அனுமதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தல்களின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அது இன்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுவரை கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் 47,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.