This Article is From Oct 04, 2019

'வெங்காயம் சேர்க்காமல் உணவு சமையுங்கள்' - இந்தியாவின் நடவடிக்கையால் திணறும் வங்கதேசம்!!

வெங்காய ஏற்றுமதியை மத்திய அரசு நிறுத்தியதைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மொத்த விற்பனை சந்தையிலேயே 100 கிலோ வெங்காயம் ரூ. 10 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.

'வெங்காயம் சேர்க்காமல் உணவு சமையுங்கள்' - இந்தியாவின் நடவடிக்கையால் திணறும் வங்கதேசம்!!

வங்கதேசம், மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் இந்தியாவின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளன.

New Delhi:

வெங்காய ஏற்றுமதியை நிறுத்தி இந்தியா மேற்கொண்ட நடவடிக்கையால் வங்க தேசம் உள்ளிட்ட ஆசிய நாடுகள் திணறி வருகின்றன. இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவின் நடவடிக்கை குறித்து புலம்பித் தள்ளியுள்ளார். 

வங்கதேச மக்களுக்கு, ' உணவு சமையுங்கள்; ஆனால் வெங்காயம் சேர்க்க வேண்டாம் ' என்று அவர் கோரிக்கை வைத்திருக்கிறார். 

இந்தியாவில் பருவமழை பாதிப்பின் காரணமாக வெங்காய உற்பத்தி கடும் சரிவைச் சந்தித்தது. இது உலகிலேயே அதிகளவு வெங்காயத்தை ஏற்றுமதி செய்யும் நம் நாட்டிற்கு சிக்கலை அளித்தது. வெங்காயத்தின் விலை ஏறியதால் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டது. 

#WATCH Bangladesh Prime Minister Sheikh Hasina in Delhi: Pyaaz mein thoda dikkat ho gya hamare liye. Mujhe maloom nahi kyun aapne pyaaz bandh kar diya? Maine cook ko bol diya ab se khana mein pyaaz bandh kardo. (Indian Govt had banned export of Onions on September 29) pic.twitter.com/NYt4ds9Jt2

இதன் ஒரு பகுதியாக வெங்காய ஏற்றுமதிக்கு கடந்த மாதம் 29-ம்தேதி அதிரடி தடை விதிக்கப்பட்டது. இதனால் இந்திய மக்கள் கவலைப்பட்டார்களோ இல்லையோ, நம் நாட்டை நம்பியிருக்கும் வங்க தேசம் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

வங்கதேசத்தில் மொத்த விற்பனை நிலையங்களில் 100 கிலோ வெங்காயம் ரூ. 10 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. இந்தியா ஏற்றுமதியை நிறுத்தியதை தொடர்ந்து வங்க தேசத்தினர் கூடுதல் விலை கொடுத்து எகிப்து, சீனா, துருக்கி போன்ற நாடுகளில் இருந்து வெங்காயத்தை வாங்குகிறார்கள். 

இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கலந்து கொண்டார். மாநாட்டில் பேசிய அவர், இந்தியாவின் வெங்காய ஏற்றுமதி நிறுத்தத்தை புலம்பித் தள்ளினார். அவர் பேசுகையில், 'இப்போதெல்லாம் எங்களுக்கு வெங்காயம் கிடைப்பது மிகவும் சிக்கலாக மாறியுள்ளது. எதற்காக எங்களுக்கு வெங்காய சப்ளையை இந்தியா நிறுத்தியது என்று தெரியவில்லை. நான் என் நாட்டு மக்களிடம் உணவு சமையுங்கள்; ஆனால் வெங்காயம் சேர்க்க வேண்டாம்' என்று கோரிக்கை வைத்துள்ளேன் என்றார்.  இது வந்திருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. 

.