This Article is From Feb 05, 2019

சிகரெட் வாங்க குறைந்தபட்ச வயது 100..!?- எங்கு தெரியுமா

தற்போது அமெரிக்காவில் சிகரெட் வாங்க குறைந்த வயது 18 ஆகும். ஆனால் ஹவாயில் அது 21 வயதாகும்.

சிகரெட் வாங்க குறைந்தபட்ச வயது 100..!?- எங்கு தெரியுமா

இத்ன் மூலம் 2024 இல் சிகரெட் விற்பனை முடிவிற்கு வரும் என நம்புகிறார்

புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானதே. இந்த சிகரெட்டின் விற்பனை மிக பெரிய வர்த்தகமாக செயல்பட்டு வருகிறது. சில நாடுகளில் சிகரெட் பயன்படுத்த குறைந்த வயது 18 ஆகவும் வேறு சில நாடுகளில் 21 ஆகவும் உள்ளது.

இந்நிலையில், இந்த வயது வரம்பை 100 ஆக உயர்த்த வேண்டும் என அமெரிக்காவில் உள்ள ஒரு மாகாணத்தில் சட்டம் கொண்டு வர பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆம். அமெரிக்காவில் உள்ள ஹவாயில், ரிச்சர்ட் கிரியகன் என்னும் மந்திரி தான் இதனை சட்டமாக கொண்டுவர பரிந்துரைத்துள்ளார். இதன் மூலம் 2024 ஆம் ஆண்டு சிகரெட்டை தடை செய்ய வாய்ப்புள்ளதாக அவர் நம்புகிறார்.

தற்போது அமெரிக்காவில் சிகரெட் வாங்க குறைந்த வயது 18 ஆகும். ஆனால் ஹவாயில் அது 21 வயதாகும்.

கிரியகனின் பரிந்துரையில், சிகரெட் வாங்க குறைந்த வயது வரம்பை 2020 இல் 30 ஆகவும் 2021 இல் 40 ஆகவும் 2022 இல் 50 ஆகவும் 2023 இல் 60 ஆகவும் 2024 இல் 100 ஆகவும் உயர்ந்த கூறியிருக்கிறார்.

டாக்டரான கிரியகன், இதன் மூலம் சிகரெட் உபயோகிப்பதால் உயிரிழப்போரின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என நம்புகிறார்.

அமெரிக்காவில் சிகரெட் உபயோகிப்பதால் வருடம் ஒன்றுக்கு 5 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

Click for more trending news


.