This Article is From May 07, 2019

காட் தொடரில் ராணி முன்பு இருந்த காபி கோப்பை: விளக்கமளித்த ஹெச்பிஓ

“4 வது எபிசோடில் டேனெரியஸ் டார்கேரியன் கதாபாத்திரத்தின் முன்பு  ஹெர்பல் டீ கப்பு ஒன்று தவறுதலாக வைக்கப்பட்டிருந்தது”

காட் தொடரில் ராணி முன்பு இருந்த காபி கோப்பை: விளக்கமளித்த ஹெச்பிஓ

கேம் ஆஃப் த்ரோன்ஸ் இறுதி சீசன் வெளியாகி வருகிறது.

கேம் ஆஃப் த்ரோன்ஸ் இறுதி சீசனின் நான்காவது எபிசோடில் டேபிளில் காபி கப் ஒன்று உள்ளது. ஹெச்பிஓ நெட்வொர்க் இது தவறுதான் விளக்கமளித்துள்ளது.

“4 வது எபிசோடில் டேனெரியஸ் டார்கேரியன் கதாபாத்திரத்தின் முன்பு  ஹெர்பல் டீ கப்பு ஒன்று தவறுதலாக வைக்கப்பட்டிருந்தது” என்று வெரியெட்டி.காம் (variety.com) ரிப்போர்ட் செய்தது.  “தி லாஸ்ட் ஆப் த ஸ்டார்க்ஸ்” எபிசோடில் சுமார் இரண்டு விநாடி சரியாக 17 நிமிடங்கள்  40 நொடியில் வரும் காட்சியில் மேசையில் காபி கோப்பை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் பலரும் இது ஸ்டார்பக்ஸின் கப் என்று எண்ணியுள்ளனர் 

ஹேஸ்டேக் ஸ்டார்பக்ஸ் #Starkbucks  ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
 

ஸ்டார்பக்ஸின்  அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு இது குறித்து ட்விட்டர் பதிவினை போட்டுள்ளது. “டிபிஹெச் ஆச்சரியமாக இருக்கிறது. அவள் டிராகனுக்காக பானத்தை ஆர்டர் பண்ணவில்லையே” என்று கேட்டிருந்தது.

கேம் ஆஃப் த்ரோன்ஸ் கலை இயக்குநர் ஹாக் ரிச்டர் “செட்டில் தவறுதலாக பொருள் வைக்கப்பட்டுள்ளது யாரும் கவனிக்கவுமில்லை. அது ஃபைனல் கட்டிலும் அந்தக் காட்சி இடம் பெற்று விட்டது என்று தெரிவித்தார். 

Click for more trending news


.