சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சாலையோரங்களில் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ளது என்று கூறி, சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கில் சென்னை முழுவதும் சட்ட விரோதமான முறையில் சுமார் 1,500 பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுபற்றி அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
இதனை அவசர வழக்காக விசாரிக்கும்படி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். மணிகுமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது சென்னை முழுவதும் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அனைத்தையும் நீக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)