This Article is From Sep 06, 2018

சைபர் க்ரைம் புகார்கள்: சமூக வலைதள நிறுவனங்களுக்க நோட்டீஸ்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆண்டனி கிளமன்ட் ரூபின் என்பவர் இது குறித்து ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்

சைபர் க்ரைம் புகார்கள்: சமூக வலைதள நிறுவனங்களுக்க நோட்டீஸ்!

சைபர் குற்றங்கள் குறித்து ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதள நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டாலும் அது குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் அந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆண்டனி கிளமன்ட் ரூபின் என்பவர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘சைபர் குற்றங்களை விசாரிக்க ஏதுவாக, சமூக வலைதள ஊடகங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆதார் எண்ணை, அவர்கள் கணக்குடன் இணைக்க வேண்டும். இது குறித்து மத்திய அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். 

இது குறித்து வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிமன்றம், ‘தகவல் தொழில்நுட்ப சட்டத்தில், சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதார் எண்ணை இணைப்பது அவசியமாகும். சட்டம் இப்படி இருக்கும் போது, சமூக வலைதள நிறுவனங்கள் இதற்கு ஏன் கட்டுப்பட மறுக்கின்றன. அதேபோன்று சிசிபி உள்ளிட்ட அரசு அமைப்புகள் சைபர் க்ரைம் குறித்து விசாரிக்க ஃபேஸ்புக், யூடியூப், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட நிறுவனங்களிடம் தகவல் கேட்டால் அதையும் தர மறுக்கின்றன’ என்று தெரிவித்தது. மேலும் இது தொடர்பாக கலிபோர்னியாவில் தலைமையிடம் அமைத்திருக்கும் ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப், வாட்ஸ்அப் மற்றும் ஐதராபத்தில் கிளை அலுவலகம் அமைத்திருக்கும் ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் அலுவலங்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் 19 ஆம் தேதிக்குள் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்கமாறும் நோட்டீஸில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.