This Article is From Sep 27, 2018

அயனாவரம் சிறுமி வன்புணர்வு வழக்கு: 6 பேர் மீதான குண்டாஸ் குறித்து கேள்வி!

அயனாவரத்தில் 11 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 17 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது

Advertisement
தெற்கு Posted by

சென்னை அயனாவரத்தில் 11 வயது காது கேளாத சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 17 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 17 பேரில், 6 பேர் மீது குண்டாஸ் வழக்கு போடப்பட்டுள்ளது. இதற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.

சென்னை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் பாலியல் கொடுமையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்ட (போக்சோ) பிரிவுகளில் சிறப்பு அரசு வழக்கறிஞர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார். மேலும், 6 பேர் மீது குண்டாஸ் வழக்கும் போடப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து 6 பேரின் குடும்பங்களும், நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. இது குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ‘குண்டாஸ் சட்டம் குறித்து முறையான விதிகள் பின்பற்றப்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையடுத்து நீதிமன்றம், அரசு தரப்பிடம் குற்றச்சாட்டுக்கான பதில் மனுவை, 3 வாரத்தில் தாக்கல் செய்யச் சொல்லி உத்தரவிட்டுள்ளது.

அயனாவரத்தில் சிறுமி வசித்து வந்த அபார்ட்மென்டின் லிஃப்ட்மேன், பாதுகாவலர்கள், ப்ளம்பர்கள், எலக்ட்ரீஷியன் மற்றும் பராமரிப்பு பணியாளர்களால் 7 மாத காலம் சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

Advertisement

தனக்கு நேர்ந்த கொடுமைகளை சிறுமி தனது சகோதரியிடம் சொன்ன பின்னர், பெற்றோர் அளித்த புகாரின்படி போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். போலீஸாரின் தகவலின்படி மயக்க ஊசி, மயக்க மருந்து கலக்கப்பட்ட பானங்கள் உள்ளிட்டவற்றை அளித்து சிறுமியை 17 பேர் கொண்ட கும்பல் வன்புணர்வு செய்து வந்துள்ளது தெரிந்தது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement