Kolkata: நாட்டை வழிநடத்துவதற்கான அனைத்து தகுதிகளும் கொண்டவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் கர்நாடகா முதல்வருமான குமாரசாமி கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான திறமைகளைப் பெற்றுள்ள தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களால், முந்தைய அரசுகள் தோல்வியைடந்த துறைகளில் வெற்றிகரமாகப் பயணிக்க முடியும்.
பிரதமர் பதவி வேட்பாளர் யார் என்பதை மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகே, ஒன்றாகக் கூடி ஆலோசித்து முடிவு செய்வோம். நாட்டை வழிநடத்துவதற்கான அனைத்து தகுதிகளும் கொண்டவர் மம்தா பானர்ஜி. எளிமையிலும் எளிமையான அவர், நல்ல நிர்வாகியும் கூட.
கொல்கத்தாவில் ஒரே மேடையில் 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்களை ஒருங்கிணைத்து மாநாட்டை மம்தா பானர்ஜி வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். அவருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.