ஹைலைட்ஸ்
- கர்நாடகாவின் உடுப்பி, தக்ஷின கன்னட கடலோர மாவட்டங்களில் கடுமையான மழை
- போக்குவரத்து பாதிப்பு, மங்களூருவின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின
- சுவர் சரிவு காரணமாக ஒரு பெண் இறந்தார்
New Delhi:
கர்நாடக்கா மாநிலத்தில் உள்ள தக்ஷினா கன்னடா மற்றும் உடுப்பியில் பொழிந்த கனத்த மழையால் மக்களின் இயல்பு நிலை பாதித்துள்ளது. நாள் முழுவதும் மங்களூர் மற்றும் இதர நகர சாலைகளில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடியதால் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. அதனால் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்ப முடியாத குழந்தைகளை போட் வைத்து மீட்டனர்.
மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் 65 வயது பாட்டி உயிர் இழந்தார்.
"மாலைகுள் தேங்கி இருந்த மழை நீர் வடிந்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக தக்ஷினா கன்னடா மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. மாலை 6 மணிக்கு மேல் நகரம் இயல்பு நிலைக்கு திரும்பியது" என துணை ஆணையாளர் சாசிகந்த் செந்தில் தெரிவித்தார்.
எச்.டி. குமாசஸ்வாமி நிலைமையை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகத்திடம் மக்களை காப்பாற்ற கடலோர காவல்படையின் உதவியை நாடவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கவும் உத்தரவு இட்டார் என முதல் அமைச்சர் அலுவுலகம் தெரிவித்தது.
பி.ஜே.பி. தலைமையிலான மத்திய அரசு வெள்ள பாதுகாப்பு முன் எச்க்கறிக்கையை மிக விரைவாக செய்தது என பல அறிக்கை தெரிவிக்கிறது.
தென்கிழக்கு ஆசியாவில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி மக்களின் பாதுகாப்புக்காக வேண்டிக்கொள்கிறேன் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
டெல்லி, உள்துறை அமைச்சர் மங்களூர் மற்றும் கர்நாடகாவில் உள்ள மற்ற கடலோர பகுதிகளின் நிலமையை ஆய்வு செய்தார்.
கர்னாடக முதல் அமைச்சராக பதவியேற்று இரண்டே நாளில் பதவி விலகிய எடியூரப்பவும் மக்களின் பாதுகாப்பு குறித்து ட்வீட் செய்துள்ளார்.