This Article is From Jan 24, 2019

''ராகுல் காந்தியை பிரதமராக பார்க்க ஆசைப்படுகிறோம்''- கர்நாடக முதல்வர் குமாரசாமி

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ராகுல் காந்திதான் காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும் என்று கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி கூறியுள்ளார்.

பிரதமர் மோடி வெறும் காகிதப் புலி என்று எச்.டி. குமாரசாமி கூறியுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • தனது கட்சி ராகுலை பிரதமராக்க பாடுபடும் என்கிறார் குமாரசாமி
  • கர்நாடகாவில் காங்கிரசுடன் குமாரசாமி கட்சி கூட்டணி ஆட்சி நடத்துகிறது
  • ராகுல் காந்தி முதிர்ச்சி பெற்ற தலைவராக உள்ளார் - குமாரசாமி
Bengaluru:

ராகுல் காந்தியை பிரதமராக பார்க்க ஆசைப்படுகிறோம் என்றும், அவர் முதிர்ச்சி  பெற்ற தலைவராக இருக்கிறார் என்றும் கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி கூறியுள்ளார். 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியின் பெயரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன் மொழிந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. 

ஸ்டாலினை தவிர்த்து மற்ற எவரும் ராகுல் காந்தியின் பெயரை கூறாமல் இருந்தனர். இதன்பின்னர் கூட்டணியில் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதியும் தனியே கூட்டணி அமைத்துக் கொண்டனர். 

இதன்பின்னர் கடந்த வாரம் மம்தா பானர்ஜி நடத்திய மாநாட்டின்போது எவரும் ராகுல் காந்தியின் பெயரை பிரதமர் வேட்பாளராக முன்மொழியவில்லை. இதனால் ராகுல் காந்தி மீது பல தலைவர்களுக்கு ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. 

இந்த நிலையில், என்.டி.டி.வி.-க்கு சிறப்பு பேட்டியளித்த கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி பிரதமராக ராகுல் காந்தியை பார்க்க ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியும், குமாராசாமியின் மதசார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி ஆட்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

.