Read in English
This Article is From Sep 25, 2018

’35 ஐஐடி மாணவர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!’- இமாச்சல் முதல்வர் தகவல்

இமாச்சல பிரதேசத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 45-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது

Advertisement
இந்தியா (with inputs from PTI)

இமாச்சல பிரதேசத்தின் லாஹுல் மற்றும் ஸ்பிடியில் பனி பொழிந்து வருகிறது

New Delhi/Shimla:

இமாச்சல பிரதேசத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 45-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. அதில் 35 பேர் ரூர்க்கியில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று தகவல் தெரிவித்துள்ளார் இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர். 

அவர் மேலும், ’மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 50 பேர் கொண்ட குழு பத்திரமாக உள்ளது. அவர்கள் லாஹுல்-ஸ்பிடி மாவட்டத்தில் உள்ள சிச்சு பகுதியில் பத்திரமாக உள்ளனர்’ என்று கூறியுள்ளார். 

இமாச்சல பிரதேசத்தின் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு 8 பேர் பலியாகியுள்ளனர். 

Advertisement

மழை காரணமாக கங்கரா, குல்லு, ஹமிர்பூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. 

குல்லு மாவட்ட நிர்வாகம், ‘ஹை அலெர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. அம்மாவட்டத்தின் அரசு அதிகாரிகளும் உஷார் நிலையில் உள்ளனர். குல்லுவில் வெள்ளம் காரணமாக, இதுவரை 20 கோடி ரூபாய்க்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து குல்லு மலைப் பிரதேசத்தில் அனைத்து வித சுற்றுலா நடவடிக்கைகளுக்கும் தற்காலிதத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

ஹமிர்பூர், குல்லு மற்றும் கங்கரா மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக மூட உத்தரவிட்டப்பட்டுள்ளது.

இமாச்சலத்தின் தலைநகர் சிம்ளாவில், கடந்த 24 மணி நேரத்தில் 53.3 மிமீ மழை பொழிந்துள்ளது. 
 

Advertisement