மகிழ்ச்சி மிகுதியால் ட்ரம்பின் பின்பக்க கையை பிரதமர் மோடி ஓங்கி அடிக்கும் காட்சி வைரலாகி வருகிறது.
ஹைலைட்ஸ்
- ட்ரம்பின் பேச்சுக்கு இந்தியில் பதில் அளித்தார் மோடி
- ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க மோடி பிரான்ஸ் சென்றுள்ளார்
- மாநாட்டின் இடையே ட்ரம்ப் - மோடி சந்திப்பு நடந்தது.
Biarritz: 'மோடி நன்றாக ஆங்கிலம் பேசுவார்... இப்போது அவர் பேச விரும்பவில்லை!' என்று பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கலாய்த்துள்ளார். பிரான்சில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இந்த சம்பவம் நடந்தது.
பிரதமர் மோடி தற்போது 3 நாடுகள் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். பிரான்ஸ், அமீரகம், பஹ்ரைன் சுற்றுப் பயணங்களை முடித்துக் கொண்டு ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மீண்டும் மோடி பிரான்சுக்கு வந்துள்ளார்.
பிரான்ஸின் பியாரிட்ஸ் நகரில் ஜி7 நாடுகளின் மாநாடு நடைபெறுகிறது. ஜி7 நாடுகள் என்பவர் சர்வதேச அளவில் பொருளாதார சக்தி கொண்ட முக்கிய நாடுகள் ஆகும்.
மாநாட்டின் இடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க குழுவும், மோடி தலைமையிலான இந்திய குழுவும் பேச்சுவார்த்தை நடத்தியது. சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்த பேச்சுவார்த்தையின்போது இருதரப்பு உறவு, தொழில்துறை, சர்வதேச விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதன்பின்னர் மோடியும், ட்ரம்பும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஆங்கிலத்தில் பேசி முடித்த பின்னர் மோடியை பேசுமாறு ட்ரம்ப் கேட்டுக் கொண்டார். அப்போது சட்டென இந்திக்கு மாறிய மோடி, 'முதலில் எங்களை பேசுவதற்கு அனுமதி அளித்திருக்க வேண்டும். அப்போதுதான் எது தேவை என்பதை அமெரிக்கா புரிந்து கொள்ள முடியும்' என்று ட்ரம்புக்கு பதில் அளித்தார்.
இதனை புரிந்து கொள்ள முடியாத ட்ரம்ப், 'மோடி ஆங்கிலத்தில் நன்றாக பேசுவார்... இப்போது அவர் பேச விரும்பவில்லை' என்றார். இதனால் அங்கு பலத்த சிரிப்பொலி எழுந்தது. ட்ரம்பின் கையை பற்றிப் பிடித்துக் கொண்ட மோடி, மகிழ்ச்சியில் ட்ரம்ப் கையின் பின்பக்கத்தில் ஓங்கி அடித்தார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.