இது போல் இனி நடக்காமல் பார்த்து கொள்கிறம்’ என ஆம்புலன்ஸ் சேவை நிறுவனம் தெரிவித்தது.
77 வயதான மர்கரத் என்பவர் தரையில் வழுக்கி விழுந்ததால் இடுப்பு பகுதியில் அடிப்பட்டது. அவரது உதவிக்கு ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டது.
ஆனால் ஆம்புலன்ஸ் வரும் முன்பே 320 கிலோமீட்டர் கடந்து அவரது மகன் வந்தடைந்தார். இது இங்கிலாந்தில் நடந்துள்ளது.
பஸ் மற்றும் ரெயிலில் பயணம் செய்து 320 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து மர்கரத்தின் மகனான கெல்மண்ட் தன் தாயின் உதவிக்கு வந்தார். ஆனால் தகவல் கொடுத்தும் வீட்டின் அருகில் இருக்கும் ஆம்புலன்ஸ் சேவை மர்கரத்தின் உதவிக்கு வந்தடைய 7 மணி நேரம் ஆகியது.
கடும் அதிருப்பதியான கெல்மண்ட், ‘எங்கள் வீட்டில் இருந்து 10 நிமிடத்தில் தான் ஆம்புலன்ஸ் சேவை இருக்கிறது. ஆனால் காயம் அடைந்து குளிரில் நடுங்கி கொண்டிருந்த என் தாய்க்கு மருத்துவ உதவி அளிக்க அவர்களை அழைத்தால், 7 மணி நேரம் கழித்து தாமதமாக வருகிறார்கள்' என தன் பக்க நியாத்தை தெரிவித்தார்.
‘இந்த கால தாமததிற்கு நாங்கள் வருந்துகிறோம். இது போல் இனி நடக்காமல் பார்த்து கொள்கிறோம்' என ஆம்புலன்ஸ் சேவை நிறுவனம் தெரிவித்தது.
Click for more
trending news