This Article is From Feb 05, 2020

கொரோனா நோய் தொற்று - WHO சொன்ன ஹெல்த் டிப்ஸ்!

நாய், பூனை போன்ற விலங்குகளை தொட்ட பிறகு சோப்பு போட்டு கைகளை நன்கு கழுவுவது நல்லது என்றும் WHO கூறியுள்ளது.

கொரோனா நோய் தொற்று - WHO சொன்ன ஹெல்த் டிப்ஸ்!

மேலும் இதுவரை இந்த நோய் தொற்று நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளுக்கு பரவும் என்பதறகு ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும்...

நுண்ணுயிர்க் கொல்லிகள் என்று அழைக்கப்படும் Antibiotics, பாக்டீரியா நோய் தொற்றை எதிர்த்து போராடுமே தவிர வைரஸ் நோய் தொற்றை எதிர்த்துப் போராடாது. ஆகையால் கொரோனா நோய் தொற்றுக்கு நுண்ணுயிர் கொல்லிகள் கொண்டு சிகிச்சை அளிப்பது கடினம் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இருப்பினும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதலாக பாக்டீரியா தொற்று எதுவும் வந்துவிட கூடாது என்பதற்காக சிகிச்சையில் சில நுண்ணுயிர் கொல்லிகள் சேர்க்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளது.

இந்த கொரோனா நோய் தொற்று எந்த வயதினரை வேண்டுமானாலும் பாதிக்கும் என்று கூறிய WHO, குறிப்பாக வயதானவர்கள் மற்றும் ஆஸ்துமா, இதய நோய் மற்றும் சக்கரை நோய்க்கான சிகிச்சை எடுத்து வருபவர்களுக்கு எளிதில் பரவும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

மேலும் இதுவரை இந்த நோய் தொற்று நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளுக்கு பரவும் என்பதறகு ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், இருப்பினும் நாய், பூனை போன்ற விலங்குகளை தொட்ட பிறகு சோப்பு போட்டு கைகளை நன்கு கழுவுவது நல்லது என்றும் WHO கூறியுள்ளது.
 

.