மூளை சாவு அடைந்த ஒருவர் இதயத்தை தானமாக அளித்துள்ளார்.
Coimbatore: தமிழக முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை ரூ. 14 லட்சம் மதிப்புள்ள இதயமாற்று அறுவை சிகிச்சை இலவசமாக ஒருவருக்கு செய்து முடிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு இதயம் பாதிக்கப்பட்டிருந்தது. 26 வயதான அந்த இளைஞருக்கு 15 சதவீத அளவு மட்மே இதயம் செயல்பட்டது. இதையடுத்து அவர் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதயமாற்று அறுவை சிகிச்சைதான் நிரந்தர தீர்வு என்ற தீர்மானத்திற்கு வந்தனர். இதற்கிடையே கடந்த வாரம் மூளைச்சாவு காரணமாக உயிரிழந்த ஒருவர் தனது இதயத்தை தானமாக அளித்திருந்தார்.
இதையடுத்து, அவரிடம் பெறப்பட்ட இதயத்தை இளைஞருக்கு அறுவை சிகிச்சை மூலமாக மருத்துவர்கள் வெற்றிகரமாக பொருத்தினர். தமிழக முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ. 14 லட்சம் மதிப்பிலான இந்த சிகிச்சை இலவசமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.