காவல் நிலையம் ஒன்றிற்கு வெளியே இந்த வீடியோ எடுக்கபட்டுள்ளதாக தெரிகிறது.
நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் பாதிக்கப்படுவது மனிதர்கள் மட்டுமல்ல. மிருகங்களும்தான். குறிப்பாக மனிதர்கள் வாழும் இடங்களில் வசிக்கும் மிருகங்களுக்கு ஊரடங்கு காரணமாகச் சரியான வகையில் உணவு கிடைப்பதில்லை. இருப்பினும் தன்னார்வலர்கள் பலரும் அரசும் உணவின்றி தவிக்கும் மிருகங்களுக்குத் தொடர்ந்து உதவி செய்து வரும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
அதன் தொடர்ச்சியாகவே சமீபத்தில் ட்விட்டர் தளத்தில் வெளியான ஒரு வீடியோ பலரை நெகிழ வைத்துள்ளது. வீடியோவில் காவலர் ஒருவர், கையில்லாத குரங்கு ஒன்றுக்குப் பொறுமையாக வாழைப்பழம் ஊட்டிவிடுகிறார். ஒரு கையில் போன் பேசிக் கொண்டே இன்னொரு கையில் வாழைப்பழத்தைப் பொறுமையாக உரித்து குரங்கிற்கு ஊட்டிவிடுகிறார் அந்த போலீஸ்.
அந்த குரங்கும் மிகவும் சாதுவாகப் பழத்தைச் சாப்பிடுகிறது. காவல் நிலையம் ஒன்றிற்கு வெளியே இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த வீடியோ ஆன்லைனில் பகிரப்பட்டதிலிருந்து தொடர்ந்து வியூஸ்களை குவித்து வருகிறது. மேலும் கருணை உள்ளம் கொண்ட அந்த போலீஸுக்கும் பலர் புகழாரம் சூட்டி வருகின்றனர்.
வீடியோவைப் பார்க்க:
வீடியோவைப் பார்த்து நெகிழ்ச்சியுடன் பகிரப்பட்ட கருத்துகளில் சில,
Click for more
trending news