This Article is From Jun 10, 2019

''இன்னும் 3 நாட்களுக்கு அனல் காற்றுதான் வீசும்''- வானிலை ஆய்வு மையம் தகவல்

தென் மேற்கு பருவ மழை எதிர்பார்ப்புக்கு குறைவாகத்தான் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

''இன்னும் 3 நாட்களுக்கு அனல் காற்றுதான் வீசும்''- வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் கடந்த 3 மாதமாக அனல் வெயில் கொளுத்தி வருகிறது

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது- 

அரபிக் கடலில் இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை புயலாக மாறக்கூடும். மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு அரபிக் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான கனமழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், வேலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அனல் காற்று வீசக்கூடும். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

.