This Article is From Jan 04, 2020

சென்னையில் 2வது நாளாக தொடரும் கடும் பனி மூட்டம்; திருப்பி விடப்பட்ட விமானங்கள்!

இதைத்தொடர்ந்து, விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

சென்னையில் 2வது நாளாக தொடரும் கடும் பனி மூட்டம்; திருப்பி விடப்பட்ட விமானங்கள்!

சென்னையில் தற்போது வடகிழக்கு பருவமழை நிலவி வருகிறது. இதன் காரணமாக அங்கு இனிமையான தட்பவெப்பம் நிலவி வருகிறது.

Chennai:

சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள கடும் பணி மூட்டம் காரணமாக 6 விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன. மேலும், 10 விமானங்கள் புறப்படுவதில் தாமதமடைந்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதில், 4 விமானங்கள் ஐதராபாத்திற்கு திருப்பிவிடப்பட்டுள்ளதாகவும், மற்ற விமானங்கள் திருச்சிக்கு திருப்பிவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சென்னையில் தற்போது வடகிழக்கு பருவமழை நிலவி வருகிறது. தொடர்ந்து, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது ஜன.4ம் தேதி வரை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அங்கு இனிமையான தட்பவெப்பம் நிலவி வருகிறது. 

இதனிடையே, சென்னையில் நேற்றைய தினமும் காலையில் கடும் பனி மூட்டம் காணப்பட்டது. எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு இந்த பனி மூட்டம் இருந்ததால், வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் கடும் பனி மூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் பல விமானங்கள் புறப்படுவதிலும், தரையிரங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது. 

இதைத்தொடர்ந்து, விமானங்கள் புறப்படுவதில் தாமதன் ஏற்பட்டதன் காரணமாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. இது தொடர்பாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் தாமதம் ஏற்பட்டுள்ளது இது எங்கள் கட்டுபாட்டிற்கு அப்பாற்பட்டது என்றும் தெரிவித்துள்ளது. 

இதேபோல், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தனது ட்வீட்டர் பதிவில், சென்னையில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக அடுத்தடுத்து விமானங்கள் புறப்படுவதிலும், தரையிரங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகள் தங்களது விமானத்தின் தற்போதைய நேர மாற்றத்தை தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக நேற்றைய தினம் சென்னை விமான நிலையத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கடும் பனி காரணமாக பல உள்நாட்டு விமானங்களும், சர்வதேச விமானங்களும் தாமதம் அடைந்தன. 

.