This Article is From Dec 20, 2019

Heavy Rain Alert - நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Heavy Rain Alert for Tamilnadu- "வட தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது."

Advertisement
தமிழ்நாடு Written by

Heavy Rain Alert for Tamilnadu- "சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைப் பொறுத்தவரை, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது."

Heavy Rain Alert for Tamilnadu- தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம்.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக தென் தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழையும்

ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும்,

வட தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைப் பொறுத்தவரை, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சூறைக்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் வீச வாய்ப்புள்ளதால் அடுத்த 48 மணி நேரத்திற்கு மீனவர்கள் இப்பகுதியில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement


 

Advertisement