Heavy Rain Alert - 'சென்னையைப் பொறுத்தவரை வானம், மேகமூட்டத்துடனேயே காணப்படும். ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யும்.'
Heavy Rain Alert - தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும் எனவும், குறிப்பாக 5 மாவட்டங்களில் கனமழை (Heavy rain) பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் (IMD) தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச் சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக நாளைய தினத்தில் தமிழகத்தின் தர்மபுரி, சேலம் (Salem), திருநெல்வேலி (Tirunelveli), தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பிருக்கிறது. அடுத்த 2 தினங்களுக்குத் தமிழகத்தின் தென் மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம், மேகமூட்டத்துடனேயே காணப்படும். ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யும்.
கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் தரங்கம்பாடியில் அதிகபட்சமாக 3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.