Heavy Rain Alert - சென்னையைப் பொறுத்தவரை வானம், மேகமூட்டத்துடன் இருக்கும். ஒரு சில இடங்களில் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Heavy Rain Alert - தமிழக அளவில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம், வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச் சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களான காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மையும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம், மேகமூட்டத்துடன் இருக்கும். ஒரு சில இடங்களில் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, காஞ்சிபுரத்தின் சத்யபாமா பல்கலைக்கழகப் பகுதி மற்றும் கடலூர் மாவட்டத்தின் சிதம்பரத்தில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.