Read in English
This Article is From Jul 27, 2019

மும்பையில் கனமழை: 11 விமானங்கள் ரத்து

அடுத்த மூன்று நாட்களில் தானே, பால்கர் மற்றும் மும்பை மாவட்டங்களில் அதிக மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement
இந்தியா Edited by
Mumbai:

இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த அடைமழையினால் மும்பையில் விமான மற்றும் ரயில்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மும்பை விமான நிலையத்தில்  11 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டன. பல விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

700க்கும் மேற்பட்ட பயணிகளைக் கொண்ட ரயில் பத்லாப்பூரில் பலத்த மழை பெய்த நிலையில் சிக்கியது. இதனால் இந்த பகுதிகளில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. புறநகர் சேவைகள் சாதாரணமாக இயங்கி வருகின்றன.

மகாலஷ்மி எக்ஸ்பிரஸில் இருந்த பயணிகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்குவதற்காக தேசிய பேரிடர் குழு அந்த இடத்தை அடைந்துள்ளது.  தேசிய பேரிடர் குழுவின் நான்கு குழுக்கள்  மும்பை மற்றும்  மாநிலத்தின் பிற பகுதிகளில் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளன.

Advertisement

சியோன் மற்றும் செம்பூர் உள்ள நகரில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சியளித்தது. இன்று நகரின் பெரும்பாலான பகுதிகளில் இப்போது தண்ணீர் குறைந்து விட்டது. 

இந்த கனமழை 2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினை நினைவு படுத்தியது. 

Advertisement

வார இறுதி வரை மும்பையில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ‘ராய்காட்' மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை முதல் அதிக மழை பெய்யக்கூடும். அடுத்த மூன்று நாட்களில் தானே, பால்கர் மற்றும் மும்பை மாவட்டங்களில் அதிக மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement